
மனித நேயம் வற்றிட்ட வாழ்வு முன்னேற்ற மான வாழ்வாகாது. மனித நேயம் மங்கி வருவதன் மத்தியிலும் மங்காது ஒளிவீசும் மாமனிதர்கள் சிலர் வாழ்ந்து அழிந்தும் கொண்டும் உள்ளனர்.
மனித உயிர்கள் மதங்களின் வெற்றியில் மாய்ந்து போகிறசமயங்களில் எல்லாம் அங்கே மனிதம் காக்க ஓடோடிச் சென்று மனிதம் மடிந்து போகாமல் தடுத்தாட்கொள்ளுகின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எமது முன்னோர்கள் கொண்டிருந்த மனித நேயம், இப்போது உள்ளவர்களிடம் காணக்கிடைப்பதில்லை.மனிதத்தைத் தொலைத்துவிட்டு இவர்கள் எங்கோ பறந்து கொண்டிருக்கிறார்கள்? அடிப்படையை இழந்து விட்டு ஆகாயத்தளவு உயர்ந்தாலும் அது உயர்வாகாது.
உலகத்தில் எவ்வளவோ மாந்தர்கள் வந்தார்கள், மதங்களாலும், சாசனங்களாலும் மனிதனை, மனித நேயம் கொண்டவனாக மாற்றவேண்டும் என்னும் கருப்பொருலாக்கி பாடுபட்டார்கள், வெற்றியும் கண்டார்கள், காலப்போக்கில் மனிதர்கள் முன் எத்தனை அத்தாட்சிகள் இருந்தும் கூட, மனிதன் மனித நேயம் இன்றி அழைந்து கொண்டிருக்கிறான்.
அன்பே சிவம் என்கிறது இந்து மதம். எவர் அண்டை அயலாரின் துன்பங்களைத் தம்முடைய துன்பமாகப் பார்க்கிறாரோ அவர்தான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவன் என்று இஸ்லாம் கூறுகிறது. அறிவு எனக்கு இருந்தாலும், ஆற்றல் பல யான் பெற்றிருந்தாலும், மறைபொருள் யாவும் நான் கற்றறிந்த போதும் மலைகளையே பெயர்த்து எடுக்கும் அளவிற்கு வமை என்னிடம் இருந்தாலும் எரிப்பதற்கோ என்னுடலைக் கையளித்த போதும் அன்பு எனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லை என்கிறது விவியம்.
ஆனால் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது? எத்தனை கொடூரமான குண்டு வெடிப்புகள், உலகமெங்கும் நடக்கிற சர்வதேச வன்முறை என்கிறார்களே அதற்கு மூலதனமாக இருப்பது என்ன? மனித நேயம் இல்லாததென் வெளிப்பாடே.
இந்த உலகின் மேல் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால் முதல் உங்களை மாற்றிக் கொள்வதற்கு நீங்கள் தயாராக வேண்டும். நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன் என்பதுதான் யோகா என்பது. உலகத்தை மாற்றவிரும்புகிறேன் என்று சொன்னால் அங்கு மோதல் தான் ஏற்படும். தன்னையே மேல்நிலைக்கு எடுத்துச் செல்வதுதான் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் முழுமையான நன்மை தருவதாக இருக்கும். இதுதான் உண்மையான புரட்சி.
இனி சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழும் அனைத்துத் தீமைகளையும் வென்றெடுத்து முன்னேற்றமடைய வேண்டு மானால் பகுத்தறிவின் உச்சமான மனித நேயம் போற்றுவதால் மட்டுமே முடியும். மனித நேயமே முன்னேற்றத்திற்கான மூலதளங்களின் அடித் தளம் எனலாம்.
0 comments:
Post a Comment